கர்ப்பக்கிருக அமைப்பு, அர்ச்சனை அபிசேக
ஆராதனைகளின் விஞ்ஞான விளக்கம்:-
ஓத்த அதிர்வு கொண்ட காற்றுமண்டலம், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடைய ஒலிக்குப் பெரும் ஓசை எழுப்பவல்லது (Maximum Sound) என்பது தெரிந்ததே
ஆகம சிற்ப சாத்திரங்கள், விக்கிரகத்தின் உயரத்துக்கேற்ப
கர்ப்பக்கிருகத்தின் உள் அளவை வரை வரையருத்திருக்கின்றன.
‘ஓம்’ என்ற ஒலிக்குக் கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று மண்டலம்
ஒத்த அதிர்வு அளிக்கும்படி அதன் உள்ளளவு அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது காற்றின் ஒவ்வொரு மூலக்கூறும் பெரும் வீச்சுடன் ஒத்த அதிர்வு அடைய முடியும்.
ஆலயத்தில் மூல விக்கிரகத்திற்கு தண்ணீர், எண்ணெய், தேன்,
பால், தயிர், விபூதி ஆகியவற்றை கொண்டு அபிசேகம்
செய்வதன் தத்துவம். இந்த ஒவ்வொரு பொருளுக்கும் மின்கடத்தும் திறன் (conductivity) மாறுபடுகிறது.
தயிர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யும்போது
விக்கிரகத்தின் மின்கடத்தும் திறன் அதிகமாகிறது.எண்ணெய், தேன், விபூதி, குங்குமம், பூ ஆகியவற்றால் அபிசேகம் செய்யும்போது இதன் மின்கடத்தும் திறன் குறைந்தாலும் நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அபிசேகப் பொருள்களான குங்குமம், பால், தயிர், தேன்,
தண்ணீர் ஆகியவற்றின் pH மதிப்பும் அளவிடப்பட்டுள்ளன. ஒரு
திரவத்தின் pH-ன் மதிப்பு அதிகரிப்பது, அதன் எதிர்மின்னூட்டம் (Negative ION Concentration) அதிகரிப்பதையே குறிக்கும்.
குங்குமம், சந்தனம், மஞ்சள், தண்ணீர் ஆகியவை அதிக pH மதிப்பு
கொண்டவை. இவற்றைக் கொண்டு அபிசேகம் செய்வதால்
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று மண்டலத்திலும் எதிர்மின்னூட்டங்கள் அதிகரிக்கும்.
அபிசேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை செய்யும்போது காற்று
மண்டலத்தில் ஒரு மின்தேக்கியை வைத்து மின்னூட்டதை
அளந்தால் தூபம், தீபம் காட்டும் மாறுபாட்டால் மின்னூட்டம்
மாறுபடுவது தெரியும்.
எதிர்மின்னூட்டமும் ஈரப்பதமும் உள்ள காற்று மண்டலம்
கர்ப்பக்கிருகத்தினுள் அமைந்து உள்ளது. அந்தக்காற்று மண்டலத்துள் ‘ஓம்’ என்ற ஒலியுடன் (பிரணவ மந்திரம்) அர்ச்சனை செய்யும்போது அந்த ஓலி விக்கிரகத்தில்
பட்டு எதிரொலிக்கிறது. இதனால் அந்தக் காற்றுமண்டலத்தில்
பெரும் அலைவும்; முத்ததிர்வும் (Maximum Amplitude at Resonance) கிடைக்கிறது.
இந்நிலையில் ஏற்படும் காற்றுவீச்சு எதிரே உள்ள பக்தர்களின்
மேல்படும்போது அவர்களுக்கு உள்ளவளமும் – உடல்நலமும்
கிடைக்கிறது.
இந்த விஞ்ஞான உண்மையை அன்றே அறிந்திருந்த நமது
முன்னோர்கள் இத்தகைய ஆலயங்களை மலைகள் மீதும்,
கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய சொலைப்பகுதிகளிலும்,
அருவிக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள்.
இந்த இடங்களில் உள்ளத்தூயமையும் உடல் நலமும் கிட்டுகிறது.
இதற்காகத்தான் ஆறுகால அபிசேகங்கள் தொடர்ச்சியாக
செயல்பட்டு வருகின்றன. அர்ச்சனைகளும் ஆராதனைகளும்
நடத்தப்படுகின்றன.

No comments:
Post a Comment