sathishinsmile

Search results

Saturday, 2 February 2019

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்



<script async src="https://cse.google.com/cse.js?cx=b7f241c60af88b595"></script>
<div class="gcse-search"></div>
                   


ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல்.இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. 

எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.
இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்)வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.

பஞ்சபூத குளியல்!





பஞ்சபூத குளியல்!


நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள்தான் பஞ்சபூத குளியல் எனப்படுகிறது. இக்குளியலின் நோக்கம், "உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான்.

கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறிகளும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன. இவற்றை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும் கழிவு வெளியேற்றமே நோய்களிலிருந்து விடுபட எளிய வழிகள்" என்கிறார் இயற்கை மருத்துவ ஆலோசகர் பூபதி வர்மன்.


நீர் குளியல்

நீர் குளியல் என்பது கழுத்து வரையுள்ள நீரில் குளிப்பதுதான். இன்றைய நகரங்களில் ஆறு, குளம், ஏரி போன்ற இடங்கள் இல்லாததால் கழுத்து வரையுள்ள நீரில் நின்று குளிப்பது சாத்தியம் அல்ல. ஆகவே வீட்டில் தொட்டிக் கட்டியோ அல்லது பாத் டப் வாங்கியோ இந்த நீர் குளியல் (தொட்டி குளியல்) சிகிச்சை செய்து கொள்ளலாம். பாத் டப்பில் கழுத்து முதல் முழங்கால் வரை ஆடையின்றி உடல் நனைந்திருக்க வேண்டும். நீரில் உள்ள அழுத்தம் மற்றும் குளிர்ந்த தன்மை உடலில் பட, உடல் குளிர்ச்சி அடைந்து பல நன்மைகளை செய்யும். நீரின் அழுத்தம் உடலில் உள்ள அமிலத்தை வெளியேற்றும். 15 நிமிடங்கள் வரை தொட்டிக் குளியலில் ஈடுபடலாம். உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் குணமாகும். பெல்விக் ஏரியா (pelvic area) பிரச்னைகளான மாதவிலக்கு பிரச்னை, கர்ப்பப்பை பிரச்னை, சிறுநீரகம், மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.


சூரியக் குளியல்

அதிகாலை சூரியன், உடலுக்கு பலவிதத்தில் நன்மையை செய்யும். சூரியனின் வெப்பக் கதிர்கள் நம் உடலில் படுவதே சூரியக் குளியல். மெல்லிய ஆடையை அணிந்து கொண்டு, சூரியன் முன் 10-15 நிமிடங்கள்வரை படுத்துக்கொள்ளலாம். வியர்வை வெளியேறும். நோய்கள் குணமாகும். நச்சு நீக்கும் செயல்முறையில் சூரியக் குளியலின் பங்கு மிகையானது. ஹார்மோன்கள் சுரக்கும் செயல்பாட்டை சமன் செய்யும். தூக்கமின்மையை போக்கும். ரத்த ஒட்டத்தை சீர் செய்யும். கண் பார்வை திறன் ஒங்கும். இயற்கையாகவே வைட்டமின் டி கிடைப்பதால் சருமம், எலும்பு, கண்கள் ஆகியவற்றிற்கு நல்லது. பற்களை உறுதியடைய வைக்கும். கொழுப்பை குறைக்கும். சருமநோய், பக்கவாதம், கீல்வாதம், எலும்புருக்கி நோய் போன்றவை வராது.



களிமண் குளியல்

ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் கிடைக்கும் வண்டல் மண்ணை எடுத்து முன்பெல்லாம் உடலில் பூசி குளித்து வந்தனர். சோப், பாடி வாஷ் போன்ற ரசாயனக் கலவைகள் கொண்ட ஆயத்த பொருட்கள் அன்று இல்லை. ஆனாலும், அவர்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், சீரான சருமத்துடன் இருந்து வந்தனர். நம் முன்னோர்கள் பயன்படுத்தியது களிமண். இன்று இதுவே களிமண் சிகிச்சையாக மாறியுள்ளது.

எறும்பு, கரையான் கட்டுகின்ற மண்ணில் இயற்கை சத்துக்கள் அதிகமாக இருக்கும். அவை உடலில் படும்போது நமக்கு நன்மையை செய்கிறது. ஒன்றரை கிலோ அளவு மண்ணை இரவில் ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் உடல் முழுதும் பூசவும். காலை வெயிலில் (9-10) மணியளவில் பெரியவர்கள் அரை மணிநேரமும், குழந்தைகள் 10 நிமிடங்களும் நிற்கலாம். உடலிலிருக்கும் மண் வறண்டு போய் உலர அரை மணி நேரத்திற்கு பிறகு மண்ணை தட்டி விட்டு குளிக்கலாம். மலச்சிக்கல், தலைவலி, ஒற்றை தலைவலி, கழிவுகள் வெளியேறமால் என்னென்ன நோய்கள் வருமோ அவையெல்லாம் குணமாகும். சருமத்தை அழகாக்கும், சருமத்திற்கு கண்டிஷனராக செயல்படும். புத்துணர்வு கிடைக்கும். தசைகள் தளர்வடைந்து மனமும், உடலும் ஓய்வு பெறும். ரத்த ஒட்டத்தை சீராக்கும். உடலில் உள்ள pH அளவை சமன் செய்யும். களிமண்ணில் கிடைக்கும் சத்துக்கள் நம் உடலில் சேரும்.


நீராவிக் குளியல்


சளி, தலைவலி எனில் வீட்டில் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு ஆவி பிடிப்போம். அதுபோல உடல் முழுவதும் நீராவி படுவது போல செய்யும் சிகிச்சைதான் நீராவிக் குளியல். இன்று அழகு நிலையங்களில் செய்யும் சிகிச்சை இது. ஆடையின்றி 10-15 நிமிடங்கள் வரை உடல் முழுவதும் நனைந்திட வேண்டும். சிகிச்சை முடிந்த பின் அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம், உடனே குளிக்கக் கூடாது. இச்சிகிச்சையால் உடலில் உள்ள துவாரங்கள் வழியே கழிவுகள் வெளியேறும். ரசாயனங்களால் மூடிவிட்ட சரும துவாரங்கள் கூட திறந்து உடலின் கழிவை வெளியேற்றும். இதனால் சருமம் சீராக சுவாசிக்கும். தலை, கை, கால், பாதம் என தனித்தனியாக நீராவி சிகிச்சையை செய்து கொள்ளலாம். உடல் வலி தீரும். புத்துணர்வு கிடைக்கும், இளமை தோற்றம் நீடிக்கும். மூப்படைதலை தடுக்கும். சரும பிரச்னைகள் வரவே வராது.


வாழைக் குளியல்


முகாம்களில் இந்த சிகிச்சை செய்து கொள்வது சிறப்பு. வீட்டில் செய்து கொள்ள நினைப்போர், கொஞ்சம் மெனக்கெடுதல் அவசியம். முகாம்களில் மருத்துவர் துணையோடு உள்ளாடைகளை அணிந்து கொண்டு இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம். நீண்ட வாழை இலையில் உள்ளாடைகளோடு படுத்துக் கொள்ளலாம். பின் உடல் மேலே வாழை இலைகளை போர்த்தி கயிறால் கட்டி விடவேண்டும். சுவாசிப்பதற்காக மூக்கு பகுதியில் மட்டும் சிறு ஓட்டை போட்டு கட்டலாம். வீட்டில் வாழைக் குளியலை மேற்கொள்பவர்கள், வீட்டு வராண்டாக்களில் செய்யலாம். ஆனால் மொட்டை மாடியில் செய்யக் கூடாது. திறந்தவெளி என்பதால் இலைகள் பறக்க வாய்ப்பிருக்கிறது. காலை 9-10 மணியளவில் வாழைக் குளியல் எடுக்கலாம். பெண்கள் 10 நிமிடங்களும், ஆண்கள் அரை மணி நேரமும் செய்யலாம். வாழை இலைகள் மேல் சூரியக் கதிர்கள் பட நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும். எதிர்ப்பு சக்தி உண்டாகும். கழிவுகள் தேங்கிய கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். மருத்துவரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ , அடிக்கடியோ செய்துகொள்ளலாம்


ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்






ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்

முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும்.
ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்..


.
1. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.
அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.



2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்!
பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து. எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள். தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.



3. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.
பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.



4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.



5. இடி இடிக்கும்போது, அர்ஜுனா...அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.



6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்!
நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும். நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.



7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.
உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.



8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு - தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.



9. கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது.
பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.



10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை. அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்

Thursday, 31 January 2019

கோயில் ரகசியங்கள்




கர்ப்பக்கிருக அமைப்பு, அர்ச்சனை அபிசேக
ஆராதனைகளின் விஞ்ஞான விளக்கம்:-
ஓத்த அதிர்வு கொண்ட காற்றுமண்டலம், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடைய ஒலிக்குப்  பெரும் ஓசை எழுப்பவல்லது (Maximum Sound) என்பது தெரிந்ததே


ஆகம சிற்ப  சாத்திரங்கள், விக்கிரகத்தின் உயரத்துக்கேற்ப
கர்ப்பக்கிருகத்தின் உள் அளவை வரை  வரையருத்திருக்கின்றன.

‘ஓம்’ என்ற ஒலிக்குக் கர்ப்பக்கிருகத்தில் உள்ள  காற்று மண்டலம்
 ஒத்த அதிர்வு அளிக்கும்படி அதன் உள்ளளவு அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது காற்றின் ஒவ்வொரு  மூலக்கூறும்  பெரும் வீச்சுடன் ஒத்த அதிர்வு அடைய முடியும்.

 ஆலயத்தில் மூல விக்கிரகத்திற்கு தண்ணீர், எண்ணெய், தேன்,
  பால், தயிர், விபூதி  ஆகியவற்றை கொண்டு அபிசேகம்
 செய்வதன் தத்துவம். இந்த ஒவ்வொரு பொருளுக்கும்  மின்கடத்தும் திறன் (conductivity)  மாறுபடுகிறது.

தயிர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம்  செய்யும்போது
விக்கிரகத்தின் மின்கடத்தும்  திறன் அதிகமாகிறது.எண்ணெய், தேன், விபூதி, குங்குமம், பூ ஆகியவற்றால் அபிசேகம் செய்யும்போது   இதன் மின்கடத்தும்  திறன் குறைந்தாலும்  நிலையாக  உள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும் அபிசேகப் பொருள்களான குங்குமம், பால், தயிர், தேன்,
தண்ணீர் ஆகியவற்றின் pH  மதிப்பும் அளவிடப்பட்டுள்ளன. ஒரு
திரவத்தின் pH-ன் மதிப்பு அதிகரிப்பது, அதன்  எதிர்மின்னூட்டம் (Negative ION  Concentration)  அதிகரிப்பதையே குறிக்கும்.

 குங்குமம், சந்தனம், மஞ்சள், தண்ணீர்  ஆகியவை அதிக pH மதிப்பு
கொண்டவை. இவற்றைக் கொண்டு அபிசேகம் செய்வதால்
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று மண்டலத்திலும் எதிர்மின்னூட்டங்கள்  அதிகரிக்கும்.


அபிசேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை செய்யும்போது காற்று
 மண்டலத்தில் ஒரு மின்தேக்கியை வைத்து மின்னூட்டதை
அளந்தால் தூபம், தீபம் காட்டும் மாறுபாட்டால் மின்னூட்டம்
மாறுபடுவது  தெரியும்.


எதிர்மின்னூட்டமும் ஈரப்பதமும் உள்ள காற்று மண்டலம்
கர்ப்பக்கிருகத்தினுள் அமைந்து உள்ளது. அந்தக்காற்று   மண்டலத்துள் ‘ஓம்’ என்ற ஒலியுடன் (பிரணவ மந்திரம்)   அர்ச்சனை செய்யும்போது அந்த ஓலி  விக்கிரகத்தில்
பட்டு எதிரொலிக்கிறது. இதனால் அந்தக் காற்றுமண்டலத்தில்
 பெரும் அலைவும்; முத்ததிர்வும் (Maximum Amplitude at Resonance)  கிடைக்கிறது.

இந்நிலையில் ஏற்படும் காற்றுவீச்சு எதிரே உள்ள பக்தர்களின் 
 மேல்படும்போது அவர்களுக்கு உள்ளவளமும் – உடல்நலமும்
கிடைக்கிறது.

இந்த விஞ்ஞான உண்மையை அன்றே அறிந்திருந்த நமது
 முன்னோர்கள் இத்தகைய ஆலயங்களை மலைகள் மீதும்,
கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய சொலைப்பகுதிகளிலும்,
அருவிக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள்.
 இந்த இடங்களில் உள்ளத்தூயமையும் உடல் நலமும் கிட்டுகிறது.

 இதற்காகத்தான் ஆறுகால அபிசேகங்கள் தொடர்ச்சியாக
செயல்பட்டு வருகின்றன. அர்ச்சனைகளும் ஆராதனைகளும்
 நடத்தப்படுகின்றன.

Wednesday, 30 January 2019

உலகின் மிகச் சிறந்த வைரம்



உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்..

 பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனைவயப்பட்டதாகவே தோன்றுகிறது. இறுக்கமான மனிதர்களாகவும், இயந்திர கதியான
 மனிதர்களாகவுமே தென்படுகின்றனர்.

 எண்ணக் குவியல்களின் கலவைகளையும்,சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ,இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல்தனியொரு உலகில் சிந்தனைகளோடே பயணிக்கும் உலகமாக மாறி விட்டது.இதற்கெல்லாம் அடிப்படை யாதென்று சிந்தித்தால் அவரவர்க்கான தனிப்பட்டஎண்ணங்களே ஆகும்.எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது  அங்கே

 வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது.மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே
 உண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.


கண்ணதாசன் சொன்னது : பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!'இருக்குமிடம் எதுவோ நினைக்குமிடம் பெரிதுபோய் வரும் உயரமும் புதுப் புது உலகமும் அவரவர் உள்ளங்களே...' இப்படி கண்ணதாசன் எண்ணங்களின் மேன்மை பற்றி அழகுற சொல்லி இருக்கிறார்.

நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரைச் சார்ந்தும் அமைகிறது.கிராமங்களில் ஒரு பழமொழி  சொல்லப்படுவதுண்டு.'வெட்கத்திற்கு அஞ்சி எருமை மாட்டை சாக கொடுத்தானாம்' என்று. 

பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன் தன் மேதாவித் தனத்தைக் காட்டும் மனிதர்கள் மற்றோர் வகை.

ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே! எண்ணிய முடிதல் வேண்டுமென ஆசைப் பட்ட பாரதியே அடுத்த வரியாக நினைவு நல்லது வேண்டும் என்கிறான். நினைவுகள் நல்லதாக இருப்பின் நெருங்கிய பொருள் கைப்படுவது பாரதியின் பார்வையில் சாத்தியமே.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று மகிழ்ந்து பாடிய பாரதி வறுமையில் இருந்த கவிஞன் தான். இவ்வாறு எண்ணியவன் நிரந்தரமாக உறங்கி விட்டான்.அவன் விதைத்த எண்ணங்கள் இன்றும் உறங்கவில்லை. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்றும்,கல்வியால் பாரினை உயர்த்திட வேண்டும் என எண்ணிய பாரதியின் எண்ணங்கள் பிறர் நலன் சார்ந்தது. பிறர் நலன் நோக்கிய பாரதி தன் எண்ணங்களாலேயே இன்றும் நம்மிடையே வாழ்கிறான்.


எண்ணிய எண்ணியாங்கு : எண்ணங்களே செயலைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கை யாளுகிறோம் என்பதிலேயே
வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. உள்ளத்தனையது உயர்வாக வேண்டுமெனில் உயர்ந்த எண்ணங் களை எண்ண வேண்டும். பூ கொடுக்க வரும் பெண்மணியிடம் 'பூ வேண்டாம்' என்று சொல்வதை விரும்ப மாட்டார். 'நாளை வாங்கி கொள்கிறேன்' என்று சொல்ல வேண்டும்.இதுவே நேர்மறைஎண்ணம்.என்னால் முடியாது என்று எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது.

பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் இத்தகைய எதிர் மறை எண்ணங்களே. இத்தகைய எதிர் மறையாளர்களிடம் பழகும் போது, நமக்கும் அத்தகைய எண்ணங்கள் நம்மை அறியாமல் புகுந்து விடுகிறது. இது தான் எண்ணங்களின் வலிமை. உன் நண்பன் யாரென்று சொல்! நீ யாரென்று சொல்கிறேன் என்ற பழமொழியின் பின் புலம் இது தான். சிறு வயதில் நாம் அனைவருமே கேட்ட விஷயம் ஒன்றை இங்கே நினைவு கூறலாம்

.நம்மைச் சுற்றி கண்ணுக்குத்தெரியாத தேவதைகள் இருக்கின்றனவாம். அந்த தேவதைகள் நாம் என்ன கூறுகிறோமோ அதற்குஅப்படியே ஆகட்டும் என்று திரும்ப கூறுமாம். ஆகவே தான் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதாக பாட்டிகள் நம் வீட்டில் அடிக்கடி கூறுவதுண்டு. விக்கலிற்கான அறிவியல் பூர்வ காரணங்கள்கூறப்பட்ட போதிலும், யாரோ நினைக்காங்க போல... என்று  கூறுவதும் எண்ணங்களே.

எண்ண அலைகள் : வோரா எனப்படும் அதிர்வலைகள் நம்மைச் சுற்றி நிறைந்து இருப்பதாகவும், அத்தகைய அலைகள் நேர்மறை மனிதர்கள் இருக்கும் இடங்களில் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நல்லா இருக்கீங்களா...என்ற கேள்வியின் எதிர் வினை பதிலை வைத்து மனிதர்களை இனங் காணலாம்.

 நல்லா இருக்கேன் என்ற பதில் தருபவர்கள் நேர்மறை 
எண்ணங்களை உடையவர்களாகவும், ஏதோ இருக்கேன் 
 என்ற பதிலை உடையவர்கள் எதிர் மறை எண்ணங்களை கொண்டவர் களாகவும் அறிந்து கொள்ளலாம்.

துஷ்டனைக் கண்டால் துார விலகு என்பதும் இதனால் தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை                    படைத்தவனாகவே ஆகிறாய். இது வீரத் துறவியின் வார்த்தைகள்.

  மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும் போது அசாதரண சக்தி பெறுகிறது. வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. ஆரோக்கியமான உடலும் உற்சாக குணமும் நிறைந்த ஒருவன் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறான்.அப்போது அவனுக்கே தெரியாமல் முன்பே பேசி வைத்து கொண்ட அவனின் நண்பர்கள் அவனை சந்திக்கின்றனர். ஒரு நண்பன் அவன் அருகில் வந்து என்னடா ஒரு மாதிரி இருக்கே என்று கேட் கிறான். இது போலவே மற்றொரு நண்பனும் உடம்பு சரியில்லையா, டல்லா இருக்கிற என்கிறான். இவ்வாறு வழி நெடுக பார்க்கும் நண்பர்கள் எல்லாம் கேட்கும் எதிர் மறை கேள்விகளால் சிக்குண்ட அவன் ஒரு கட்டத்தில் அதை உண்மையாகவே எண்ணத் தொடங்கி நோய் வாய்ப்பாட்டு படுத்து விடுகிறான். இப்படியான மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கலாம். அத்தகைய குணம் கொண்ட மனிதர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். மனதின் எண்ணங்களைப்  பலவீனமடையச்  செய்யும் சக்திகளின் வலைகளை அறுத்தெறிய
 வேண்டும். அரசவையில் விகட கவிகளின் மூலம் மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்ட அரசர்கள் போல நம் வாழ்வின் மனக் கவலையை மாற்றலாக்கும் மனிதர்களையே நட்புக் கரத்திற்குள் வைத்துக் கொள்வோம். அவர்களே வழியும், ஒளியுமானவர்கள்.


நேர்மறை எண்ணங்கள் : ஒவ்வொரு நாளும் துாங்கச் செல்வதற்கு முன் அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள். நான் எல்லா வகையிலும் முன்னை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறிக் கொள்ளும் போது அந்த 

எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதே போன்றே இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என் 

வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். நம்மைத் தவிர நம்மை யாரும் பிரசவித்துக் கொள்ள முடியாது. எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை..இது போன்ற வார்த்தைகள் 

எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர் பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காகவர வேண்டும். அகத்தில் தேவையற்ற குப்பைகளைத் தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத் தான் இருக்கிறோம். அப்படியானால் நம் எண்ணங்களும் அதைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்கு  களைப்

 பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள். எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல.. ஆழ்மனம் தான். நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்து அதை இயக்கும் இயக்குநராக மனதைப் பழக்கப்படுத்தும் போது அது வழக்கமாகவே மாறி விடும்.


எண்ணங்களை வலிமையாக்க : எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா... என்னும் பாரதியின் நேர் மறை சிந்தனையே எண்ணங்களை வலுவாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாகக் கடந்து விடும்பக்குவமும் வந்து விட்டாலே 

வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நோய்க் கிருமிகளை பரப்பும் ஏடிஸ் கொசுக்களாக இல்லாமல் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்களாக வாழ்வோம்.நினைத்தது எல்லாம் நடக்கணும் என்று எண்ணிப் படுத்த திருடன் முதலில் கட்டில், பின்பு தலையணை என ஒவ்வொன்றாக கேட்க அனைத்தும் கிடைக்கவும், நல்ல உறக்கம் வர நினைப்பவன், உறங்கும் நேரம் புலி வந்து கொன்று விட்டால் என நினைக்க இறுதியில் புலி அவனைக் கொன்றதாக அந்தக் கதை 

முடியும். நம் எண்ணங்கள் எத்தகையதாக அமைய வேண்டும் என்பதை இந்தக் கதை 

உணர்த்துகிறது அல்லவா? எனவே நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம்

எண்ணமது திண்ணமானால் வாழ்க்கையது வண்ணமாகும்.எண்ணங்களை வசமாக்கி 

வாழ்வாங்கு வாழ்வோம்.