sathishinsmile

Search results

Saturday, 2 February 2019

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்



<script async src="https://cse.google.com/cse.js?cx=b7f241c60af88b595"></script>
<div class="gcse-search"></div>
                   


ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல்.இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. 

எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.
இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்)வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.

பஞ்சபூத குளியல்!





பஞ்சபூத குளியல்!


நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள்தான் பஞ்சபூத குளியல் எனப்படுகிறது. இக்குளியலின் நோக்கம், "உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான்.

கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறிகளும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன. இவற்றை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும் கழிவு வெளியேற்றமே நோய்களிலிருந்து விடுபட எளிய வழிகள்" என்கிறார் இயற்கை மருத்துவ ஆலோசகர் பூபதி வர்மன்.


நீர் குளியல்

நீர் குளியல் என்பது கழுத்து வரையுள்ள நீரில் குளிப்பதுதான். இன்றைய நகரங்களில் ஆறு, குளம், ஏரி போன்ற இடங்கள் இல்லாததால் கழுத்து வரையுள்ள நீரில் நின்று குளிப்பது சாத்தியம் அல்ல. ஆகவே வீட்டில் தொட்டிக் கட்டியோ அல்லது பாத் டப் வாங்கியோ இந்த நீர் குளியல் (தொட்டி குளியல்) சிகிச்சை செய்து கொள்ளலாம். பாத் டப்பில் கழுத்து முதல் முழங்கால் வரை ஆடையின்றி உடல் நனைந்திருக்க வேண்டும். நீரில் உள்ள அழுத்தம் மற்றும் குளிர்ந்த தன்மை உடலில் பட, உடல் குளிர்ச்சி அடைந்து பல நன்மைகளை செய்யும். நீரின் அழுத்தம் உடலில் உள்ள அமிலத்தை வெளியேற்றும். 15 நிமிடங்கள் வரை தொட்டிக் குளியலில் ஈடுபடலாம். உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் குணமாகும். பெல்விக் ஏரியா (pelvic area) பிரச்னைகளான மாதவிலக்கு பிரச்னை, கர்ப்பப்பை பிரச்னை, சிறுநீரகம், மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.


சூரியக் குளியல்

அதிகாலை சூரியன், உடலுக்கு பலவிதத்தில் நன்மையை செய்யும். சூரியனின் வெப்பக் கதிர்கள் நம் உடலில் படுவதே சூரியக் குளியல். மெல்லிய ஆடையை அணிந்து கொண்டு, சூரியன் முன் 10-15 நிமிடங்கள்வரை படுத்துக்கொள்ளலாம். வியர்வை வெளியேறும். நோய்கள் குணமாகும். நச்சு நீக்கும் செயல்முறையில் சூரியக் குளியலின் பங்கு மிகையானது. ஹார்மோன்கள் சுரக்கும் செயல்பாட்டை சமன் செய்யும். தூக்கமின்மையை போக்கும். ரத்த ஒட்டத்தை சீர் செய்யும். கண் பார்வை திறன் ஒங்கும். இயற்கையாகவே வைட்டமின் டி கிடைப்பதால் சருமம், எலும்பு, கண்கள் ஆகியவற்றிற்கு நல்லது. பற்களை உறுதியடைய வைக்கும். கொழுப்பை குறைக்கும். சருமநோய், பக்கவாதம், கீல்வாதம், எலும்புருக்கி நோய் போன்றவை வராது.



களிமண் குளியல்

ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் கிடைக்கும் வண்டல் மண்ணை எடுத்து முன்பெல்லாம் உடலில் பூசி குளித்து வந்தனர். சோப், பாடி வாஷ் போன்ற ரசாயனக் கலவைகள் கொண்ட ஆயத்த பொருட்கள் அன்று இல்லை. ஆனாலும், அவர்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், சீரான சருமத்துடன் இருந்து வந்தனர். நம் முன்னோர்கள் பயன்படுத்தியது களிமண். இன்று இதுவே களிமண் சிகிச்சையாக மாறியுள்ளது.

எறும்பு, கரையான் கட்டுகின்ற மண்ணில் இயற்கை சத்துக்கள் அதிகமாக இருக்கும். அவை உடலில் படும்போது நமக்கு நன்மையை செய்கிறது. ஒன்றரை கிலோ அளவு மண்ணை இரவில் ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் உடல் முழுதும் பூசவும். காலை வெயிலில் (9-10) மணியளவில் பெரியவர்கள் அரை மணிநேரமும், குழந்தைகள் 10 நிமிடங்களும் நிற்கலாம். உடலிலிருக்கும் மண் வறண்டு போய் உலர அரை மணி நேரத்திற்கு பிறகு மண்ணை தட்டி விட்டு குளிக்கலாம். மலச்சிக்கல், தலைவலி, ஒற்றை தலைவலி, கழிவுகள் வெளியேறமால் என்னென்ன நோய்கள் வருமோ அவையெல்லாம் குணமாகும். சருமத்தை அழகாக்கும், சருமத்திற்கு கண்டிஷனராக செயல்படும். புத்துணர்வு கிடைக்கும். தசைகள் தளர்வடைந்து மனமும், உடலும் ஓய்வு பெறும். ரத்த ஒட்டத்தை சீராக்கும். உடலில் உள்ள pH அளவை சமன் செய்யும். களிமண்ணில் கிடைக்கும் சத்துக்கள் நம் உடலில் சேரும்.


நீராவிக் குளியல்


சளி, தலைவலி எனில் வீட்டில் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு ஆவி பிடிப்போம். அதுபோல உடல் முழுவதும் நீராவி படுவது போல செய்யும் சிகிச்சைதான் நீராவிக் குளியல். இன்று அழகு நிலையங்களில் செய்யும் சிகிச்சை இது. ஆடையின்றி 10-15 நிமிடங்கள் வரை உடல் முழுவதும் நனைந்திட வேண்டும். சிகிச்சை முடிந்த பின் அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம், உடனே குளிக்கக் கூடாது. இச்சிகிச்சையால் உடலில் உள்ள துவாரங்கள் வழியே கழிவுகள் வெளியேறும். ரசாயனங்களால் மூடிவிட்ட சரும துவாரங்கள் கூட திறந்து உடலின் கழிவை வெளியேற்றும். இதனால் சருமம் சீராக சுவாசிக்கும். தலை, கை, கால், பாதம் என தனித்தனியாக நீராவி சிகிச்சையை செய்து கொள்ளலாம். உடல் வலி தீரும். புத்துணர்வு கிடைக்கும், இளமை தோற்றம் நீடிக்கும். மூப்படைதலை தடுக்கும். சரும பிரச்னைகள் வரவே வராது.


வாழைக் குளியல்


முகாம்களில் இந்த சிகிச்சை செய்து கொள்வது சிறப்பு. வீட்டில் செய்து கொள்ள நினைப்போர், கொஞ்சம் மெனக்கெடுதல் அவசியம். முகாம்களில் மருத்துவர் துணையோடு உள்ளாடைகளை அணிந்து கொண்டு இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம். நீண்ட வாழை இலையில் உள்ளாடைகளோடு படுத்துக் கொள்ளலாம். பின் உடல் மேலே வாழை இலைகளை போர்த்தி கயிறால் கட்டி விடவேண்டும். சுவாசிப்பதற்காக மூக்கு பகுதியில் மட்டும் சிறு ஓட்டை போட்டு கட்டலாம். வீட்டில் வாழைக் குளியலை மேற்கொள்பவர்கள், வீட்டு வராண்டாக்களில் செய்யலாம். ஆனால் மொட்டை மாடியில் செய்யக் கூடாது. திறந்தவெளி என்பதால் இலைகள் பறக்க வாய்ப்பிருக்கிறது. காலை 9-10 மணியளவில் வாழைக் குளியல் எடுக்கலாம். பெண்கள் 10 நிமிடங்களும், ஆண்கள் அரை மணி நேரமும் செய்யலாம். வாழை இலைகள் மேல் சூரியக் கதிர்கள் பட நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும். எதிர்ப்பு சக்தி உண்டாகும். கழிவுகள் தேங்கிய கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். மருத்துவரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ , அடிக்கடியோ செய்துகொள்ளலாம்


ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்






ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்

முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும்.
ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்..


.
1. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.
அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.



2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்!
பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து. எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள். தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.



3. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.
பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.



4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.



5. இடி இடிக்கும்போது, அர்ஜுனா...அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.



6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்!
நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும். நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.



7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.
உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.



8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு - தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.



9. கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது.
பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.



10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை. அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்